ஜொகூர் மாநில அரசு மருத்துவமனைகளில் தன்னார்வலர்கள் நியமனம்!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

ஜொகூர் பாரு, ஜூலை 22-

ஜொகூர் மாநிலத்தில் உள்ள இரு முக்கியமான அரசுமருத்துவமனைகள், சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை மற்றும் சுல்தானா அமீனா மருத்துவமனை ஆகியவற்றின் பணிச்சுமையை குறைக்கும் முயற்சியாக, விரைவில் 100 தன்னார்வலர்கள் நியமிக்கப்படவுள்ளதாக மாநில சுகாதார மற்றும் சூழலியல் ஆணையத் தலைவர் லிங் டியான் சூன் தெரிவித்துள்ளார்.

இந்த தற்காலிக நடவடிக்கையாக உள்ள திட்டம், ஜொகூர் சதர்ன் வாலண்டியர்ஸ் குழுவைச் சேர்ந்த தன்னார்வலர்களை இரு மருத்துவமனைகளிலும் ஒப்படைக்கும் திட்டமாகும். "மருத்துவமனைகளில் தற்போதைய பணி அழுத்தங்களை குறைக்கும் வகையில் இது மாநில அரசின் குறுகியகால முயற்சியாகும். என்று அவர் தெரிவித்தார்.

ஜூலை 21ஆம் தேதி சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் எக்கோகார்டியோகிராஃபி
இயந்திரம் ஒப்படைக்கும் நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய லிங், தன்னார்வலர்கள் ஒரு வார பயிற்சி முடித்து, நிர்வாகப் பணிகள், நோயாளிகள் பதிவு மற்றும் மருத்துவம் சாராமருத்துவப் பணிகளை ஏற்கவுள்ளனர் எனக் கூறினார்."பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் நோயாளிகளை வார்டுக்கு அழைத்துச் செல்வது, பதிவு செய்வது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். இதன் மூலம் மருத்துவ ஊழியர்கள் தங்கள் முக்கியமான மருத்துவப்பணிகளில் கவனம் செலுத்த முடியும்.

உதாரணமாக மாதிரிகளை ஆய்வுக்கூடம் அனுப்புவது அல்லது படிவங்களை நிரப்புவது போன்ற பணிகளை தன்னார்வலர்கள் கவனிப்பார்கள்," என்றார்.இது ஒரு தற்காலிக முயற்சி என்றும், இதனுடன் பிணைந்த நீண்டகாலத் தீர்வாக மருத்துவமனைகளுக்கான பயிற்சி ஒதுக்கீடுகள் அதிகரிப்பு மற்றும் புதிய பணியிடங்கள் நிரப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் லிங் தெரிவித்தார்.

மாநில மற்றும் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு இடையிலான சமீபத்திய கூட்டத்தில், சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிஃப்லி அகமட் மற்றும் ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டதாகவும், அதில் தன்னார்வலர்களை மருத்துவமனைகளில் பணியமர்த்தும் திட்டம் முடிவுக்குவந்ததாகவும் கூறினார்.

“இது போன்ற திட்டத்தை அரசுமருத்துவமனைகளில் செயல்படுத்தும் முதல் மாநிலமாக ஜொகூர் அமையும்," எனக் கூறிய லிங், தன்னார்வலர்கள் கடமைப்பட்ட அடிப்படையில் பணியாற்றுவார்கள் என்றும், அவர்களுக்கு சிறிய அனுசரணைத் தொகை வழங்குவதை அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

“தற்போது ஜொகூரில் 29,000க்கும் மேற்பட்ட சுகாதாரத் துறையினர்கள் உள்ளனர். இருப்பினும், நாங்கள் குறைந்தது 4,600 நபர்களுக்கான பணியிடங்களை இன்னும் நிரப்பவேண்டிய நிலைமை உள்ளது. இதில் நிபுணர் மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் ஆகியோர் அடங்குவர்,"எனவும் அவர் கூறினார்.

"தெற்குப் பகுதியில் (சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை, சுல்தானா அமீனா மருத்துவமனை மற்றும் விரைவில் செயல்படவுள்ள பாசீர் கூடாங் மருத்துவமனை) அதிக நோயாளிகள் இருப்பதால், இப்பகுதிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்," என லிங் டியான் சூன் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *