ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு! - கல்வி அமைச்சர்
- Shan Siva
- 03 Jul, 2025
பாங்கி, ஜூலை 3: நாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது என்றும், இது தேசிய கல்வி முறைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது என்றும் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
கல்வி சேவை ஆணையத்துடன் இணைந்து கல்வி அமைச்சகம் மேற்கொண்ட சீர்திருத்தங்களின் விளைவாக இந்த சாதனை நிகழ்ந்துள்ளதாகவும், நாட்டின் கல்வி வரலாற்றில் இதுபோன்ற வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறினார்.
மலேசியாவில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பான எந்தப் பிரச்சினையும் இனி இல்லை. பல்வேறு வழிமுறைகள் மூலம் இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பணியமர்த்தும் ஆசிரியர்கள் தகுதி வாய்ந்தவர்களாகவும் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவர்களாகவும் இருப்பதை உறுதி செய்வதும் தங்கள் அமைச்சின் நோக்கம் என அவர் கூறினார்.
இன்று மலேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் (IPGM) 15வது பட்டமளிப்பு விழாவில் ஃபத்லினா இவ்வாறு உரையாற்றினார்!
Menteri Pendidikan, Fadhlina Sidek mengumumkan isu kekurangan guru di Malaysia berjaya diselesaikan hasil kerjasama dengan Suruhanjaya Perkhidmatan Pendidikan. Beliau menegaskan guru dilantik berkelayakan serta mampu memenuhi keperluan pelajar demi kejayaan sistem pendidikan negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



