செமினியில் அடுக்குமாடி பால்கனியில் இருந்து விழுந்து ஒரு பெண் உயிரிழப்பு!
- Muthu Kumar
- 29 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 29:
நேற்று மாலை செமினியில் 14வது மாடி அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து விழுந்து ஒரு பெண் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை அப்பகுதியில் ரோந்து சென்ற ஒரு பாதுகாப்பு காவலர் நேரில் பார்த்ததாக காஜாங் காவல்துறைத் தலைவர் நாஸ்ரோன் யூசோஃப், கூறினார்.
48 வயதான அந்த நபர் வாகன நிறுத்துமிடத்தில் விழுவதற்கு முன்பு தனது பால்கனியில் அமர்ந்திருப்பதை தாம் கண்டதாக அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.தலை மற்றும் தொடையில் பலத்த காயங்களால் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக காஜாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது, மேலும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



