தப்பி ஓடி ஏரியில் குதித்த பெண் மரணம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 10: செராஸ் பண்டார் துன் ஹுசைன் ஒன்னில் உள்ள ஏரியில் ஒரு வெளிநாட்டுப் பெண் குதித்து நீரில் மூழ்கி இறந்தார்.

சம்பவம் தொடர்பாக நேற்று மாலை 4.35 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெர்வித்தார். பண்டார் துன் ஹுசைன் ஒன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனம் மாலை 4.39 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்ததாக அவர் கூறினார்.

தூதரக ஊழியர்களிடமிருந்து தப்பி ஓடியதாக நம்பப்படும் 30 வயதுடைய இந்தோனேசியப் பெண் ஏரியில் குதித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10.10 மணிக்கு நீர் மீட்புப் பிரிவமீட்பு நடவடிக்கையைத் தொடங்கிய  ஒன்பது நிமிடங்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர் ஏரியின் விளிம்பிலிருந்து சுமார் 6 மீ தொலைவில் 3 மீ ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவ  அவர் கூறினார். உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *