கிரிப்டோ கரன்ஸி ஆன்லை மோசடியில் சிக்கி RM 5, 72, 130 இழந்த பெண்!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, செப் 19: தைப்பிங்கில் உள்ள ஒரு தனியார் மொழிபெயர்ப்பாளர், இணையத்தில் இயங்கிய போலியான கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடியில் சிக்கி RM572,130 இழந்தார்.

நேற்று மாலை 4.19 மணிக்கு 40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் போலீசில் புகார் செய்ததாக தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. மொஹமட் நசீர் இஸ்மாயில் கூறினார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி Instagram வழியாக “யாங் யூட்டிங்” என தன்னை சீன நாட்டவராகக் கூறிய ஒருவரிடமிருந்து தொடர்பு வந்தது தெரியவந்தது. பின்னர் உரையாடல் WhatsApp-க்கு மாறியது.

அந்த சந்தேக நபர், ஒரு குறிப்பிட்ட கிரிப்டோகரன்சியில் (பெயர் தெரியவில்லை) முதலீடு செய்தால் 20 சதவீதம் வருமானம் கிடைக்கும் என கூறினார்.
அவரது விளக்கத்தை கேட்ட பிறகு, அந்தப் பெண் ஆர்வம் கொண்டு முதலீடு செய்ய சம்மதித்தார் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

ஆரம்பமாக RM8,740 முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆகஸ்ட் 22 அன்று அவர் அந்தத் தொகையை ஆன்லைனில் ஒரு நிறுவன கணக்கிற்கு மாற்றினார் மற்றும் RM9,595 என லாபம் பெற்றார்.

இந்த கவர்ச்சியான வருமானத்தைப் பார்த்த அந்தப் பெண் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 5 வரை 12 ஆன்லைன் பரிமாற்றங்களின் மூலம் ஒன்பது வங்கி கணக்குகளுக்கு மொத்தம் RM572,130 மாற்றினார். பின்னர் சந்தேக நபரால் மேலும் பணம் செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பணம் வழங்க முடியாத நிலைக்கு வந்தபோது, வங்கி கடன் எடுக்குமாறு கேட்டதாகவும், ஆனால் தன்னை ஏமாற்றியிருப்பதை உணர்ந்ததும் கடனை மறுத்து போலீசில் புகார் செய்ததாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420ஆம் பிரிவின் கீழ் (ஏமாற்றல்) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *