பத்து பகாட்டில் போலி முதலீட்டுத் திட்டத்தில் பெண் ஒருவர் வெ. 571,242 இழந்தார்!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

பத்து பகாட், செப். 9-

பத்து பகாட் மாவட்ட காவல்துறை வணிக குற்றப்பிரிவு 55 வயது உள்ளூர் பெண்ணிடமிருந்து போலி முதலீட்டுத் திட்ட மோசடி தொடர்பான புகாரை பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர் 16 மார்ச் 2024 அன்று ஃபேஸ்புக்கில் வெளியான முதலீட்டு விளம்பரத்தால் கவரப்பட்டு, அதிக லாபத்தை வழங்கும் என கூறப்பட்ட திட்டத்தில் ஈடுபட்டார்.

பாதிக்கப்பட்டவர். வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்ட  அடையாளம் தெரியாத நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி முதலீட்டில் இணைய அழைக்கப்பட்டார். 10 ஜூலை 2025 முதல் 31 ஜூலை 2025 வரையிலான காலத்தில், மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் மொத்தம் வெ.571,242 தொகையை செலுத்தினார்.

ஆரம்பத்தில் ரி.ம 84,000 லாபம் பெற்றிருந்தாலும், பின்னர் அந்தத் தொகையைப் பெற முடியாமல் போனது சந்தேகத்திற்கிடமாக, கணக்குகள் முடக்கப்பட்டதால் அவர் பணத்தை திரும்பப் பெற முடியவில்லை.இறுதியில், வெ.571,242ஐ முழுமையாக இழந்ததாகத் தெரிகிறது.இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 420இன் கீழ் விசாரிக்கப்படுகின்றது.

அதிக லாபத்தை உறுதி செய்கிறோம் என்கிற போலி முதலீட்டு விளம்பரங்களை மக்கள் எளிதில் நம்பக்கூடாது என பத்து பகாட் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி ஏ.சி.பி. ஷஹ்ருலனு ஆர் முஷாதாத் பின் அப்துல்லா சானி தெரிவித்தார். மேலும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் ஏற்பட்டால், தேசிய மோசடி நடவடிக்கை மையத்தை 997 என்ற எண் மூலம் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *