பல இடங்களில் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் உடல்! - 70 வயது முதியவர் கைது

top-news
FREE WEBSITE AD

கோத்தா கினபாலு, பிப்13: இண்டா பெர்மாய் பகுதியில் நேற்று அதிகாலை பல இடங்களில் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட  பெண்ணின் கொலை வழக்கில் போலீசார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

70 வயதிற்குட்பட்ட உள்ளூர் ஆண் ஒருவர்  நேற்று மாலை சுமார் 5 மணியளவில் கோத்தா கினபாலுவில் கைது செய்யப்பட்டார்.
நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் குப்பை லாரி பணியாளர் ஒருவர், சுமார் 40 வயதுடைய பெண்ணின் உடல் பகுதிகளை குப்பைத் தளத்தில் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது.

மீட்கப்பட்ட தலை மற்றும் உடல் பகுதியிலிருந்து கிடைத்த தடயங்களின் அடிப்படையில் சந்தேக நபரின் இருப்பிடத்தை போலீசார் கண்டறிந்து, 24 மணி நேரத்திற்குள் அவரை கைது செய்துள்ளனர்.

ஆரம்ப விசாரணைகளின் படி, பொறாமை இந்தக் கொலையின் நோக்கமாக இருந்திருக்கலாம் என்றும், சம்பவத்திற்கு முன் சந்தேக நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் தலைவர் பொறுப்பு வகிக்கும் சூப்பிரிண்டெண்ட் சையத் லோட் சையத் அப்துல் ரஹ்மான், சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
70 வயதுடைய உள்ளூர் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதால் வழக்கு தீர்வு கண்டுள்ளது. எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302 (கொலை) கீழ் விசாரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
சந்தேக நபர் தற்போது மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு, இண்டா பெர்மாய் தாமான் பகுதியில் உள்ள குப்பைத் தளத்தில் முதலில் கை மற்றும் கால் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விரிவான தேடுதலில், பிற உடல் பகுதிகள் அருகிலுள்ள மற்றொரு குப்பைத் தளத்தில் சுமார் காலை 11.40 மணியளவில் மீட்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *