"ஆசனவாயில் வெடிகுண்டு". உறைந்து போன டாக்டர்கள்!
- Muthu Kumar
- 04 Feb, 2026
பிரான்ஸ் நாட்டில் இளைஞர் ஒருவர் தனது ஆசனவாயில் வெடிகுண்டுடன் மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாதுகாப்பு கருதி மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் குழந்தைகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
கடந்த 31-ம் தேதி இரவு, பிரான்ஸின் டூலோன் நகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு 24 வயதுடைய இளைஞர் ஒருவர் சிகிச்சைக்கு வந்தார். தனது ஆசனவாயில் ஒரு பொருளை நுழைத்துவிட்டதாகவும், அதனை மீண்டும் வெளியே எடுக்க முடியவில்லை என்றும் அவர் மருத்துவர்களிடம் தெரிவித்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உள்ளே இருந்தது வெடிகுண்டு என்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், அந்தப் பொருளின் தன்மையை ஆய்வு செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
அதன்பின்னர், அறுவை சிகிச்சை நிபுணர்கள் அந்த இளைஞரின் அடிவயிற்றில் நுட்பமான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அவரது ஆசனவாயில் சிக்கியிருந்த அந்த வெடிகுண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
அகற்றப்பட்ட பொருளை ஆய்வு செய்தபோது, அது முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 8 அங்குல நீளமுள்ள பீரங்கி குண்டு என்பது தெரியவந்தது. அந்த இளைஞர் எதற்காக இத்தகைய விபரீத முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனைக்கு வெடிகுண்டோடு வந்த இளைஞரின் செயல் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



