ஜோ லோவைக் கண்டுபிடிக்க அனைத்துலக அதிகாரிகளுடன் ஒத்துழைக்க உள்துறை அமைச்சு முயற்சி!
- Muthu Kumar
- 10 Sep, 2025
1MDB ஊழல் தொடர்பாக ஜோ லோவைக் கண்டுபிடித்து மீண்டும் அழைத்து வருவதற்கு மலேசியா அனைத்துலக சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக அதிகாரிகளுடன் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ள உள்துறை அமைச்சகம் மூலம் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக புக்கிட் அமானின் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இன்று ஒரு அறிக்கையில் கூறியது.
சீனாவின் ஷாங்காயில் உள்ள ஒரு பிரத்யேக பகுதியில் போலி ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி ஜோ லோ வசித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.ஜோ லோ சீனாவில் இருப்பதைக் குறிக்கும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று முன்னதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



