அரசியல் வளர்ச்சி மகளிர் மேம்பாட்டுத் துறையில் பெண்கள் பட்டம் பெற்றனர்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

ஷா ஆலம், அக்.13-

அரசியல் துறையில் அதன் வளர்ச்சி திட்டமிடல் மற்றும் மகளிர் மேம்பாட்டுக்கான தீவிர பணிகள் செயல்பாடுகள் அடி ப்படையில் 93 பெண்கள் பட்டம் பெற்றனர். நேற்று காலையில், மாநில அரசின் வளாகத்தில் இருக்கும் டேவான் ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு மகளிர் மேம்பாடு மற்றும் மக்கள் சமூகநலப் பிரிவு ஆட்சிக் குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி பட்டங்களை எடுத்து வழங்கி அவர்களை வாழ்த்தினார்.




ஒரு நாட்டை எப்படி நேரிய வழியில் நடத்த வேண்டும், மக்களுக்கான தேவைகளை அறிந்து உடனுக்குடன் உதவ வேண்டும். வருகின்ற பிரச்சினைகளை எங்ஙனம் எதிர்கொண்டு முறியடித்து எப்படி சாதிக்க வேண்டும் என்பதற்கு, பெண்களுக்கு அரசியல் கல்வியும் இந்தக் காலக் கட்டத்தில் மிகவும் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் இதில் நன்கு தேர்ச்சியும் திறனும் பெற்ற பெண்களுக்கு சிறப்பு பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அரசியல் துறையில் பங்கேற்க வரும் மகளிர் அதற்கான பொறுப்பை தக்கபடி வழங்கினால் ஆட்சிக் கட்டிலில் அமரும் அவர்கள் நாட்டின் நிர்வாகத்தையும் மக்கள் நலனையும் ஏக காலத்தில் பாதுகாத்து வழி நடத்த முடியும் என்பதில் தாம் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதால் பட்டம் பெற்ற பெண்கள் இன்னும் கூடுதல் பணிகளை அவர்களைச் சார்ந்துள்ள சமூகம், சமுதாயத்திற்கு சிறப்பாக சேவையாற்ற முடியும் என்று அன்ஃபால் சாரி தமது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்.

சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த மனித வள மக்கள் நலப்பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான், பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற அனைத்து பெண்களுக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். குறிப்பாக, இந்த நிகழ்ச்சியில் பட்டம் பெற்ற தமது பந்திங் சட்ட மன்ற மக்கள் சேவை மையத்தின் உயர் அதிகாரி கண்மணி பெரியண்ணன், ஞானேஸ்வரி சேகரன் இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *