வாருங்கள் கட்டியணைப்போம்! - ம.இ.கா & ம.சீ.சா-வுக்கு ஜாஹிட் அழைப்பு
- Shan Siva
- 16 Jan, 2026
கோலாலம்பூர், டிச 16: கோலாலம்பூர்: அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி, பாரிசான் நேஷனல் (BN) கூட்டணியில் உள்ள ம.சீ.ச மற்றும் ம.இ.கா ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, மீண்டும் பாரிசான் மீது கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மலேசியாவின் பழமையான இந்த கூட்டணியை விட்டு விலகும் சாத்தியம் குறித்து அந்த கட்சிகள் ஆலோசித்து வரும் நிலையில், ஜாஹித் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
பக்காத்தான் ஹரப்பான் (PH) உடன் இணைந்து ஒற்றுமை அரசை அமைத்த முடிவு, BN-இன் கூட்டணி கட்சிகளுக்கிடையே, குறிப்பாக
ம.சீ.ச மற்றும் ம.இ.கா உடன் உள்ள உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தியதை ஜாஹித்
ஒப்புக்கொண்டார்.
எனினும், இன்று
காலை நடைபெற்ற அம்னோ உச்ச மன்றக் கூட்டத் தொடக்க நிகழ்வில் ம.சீ.ச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியாங் மற்றும் ம.இ.கா
துணைத் தலைவர் டத்தோ எம். சரவணன் கலந்துகொண்டதற்கு அவர் நன்றி
தெரிவித்தார்.
தனது தொடக்க உரையில், வீ கா சியாங் மற்றும் சரவணனை நோக்கி பார்வை செலுத்தியபடி பேசிய
ஜாஹித், சிறிது காலம் மனமுடைந்திருக்கலாம்,
அது பரவாயில்லை. ஆனால் இப்போது நாம் அனைவரும் மீண்டும் BN-க்கு திரும்ப வேண்டும். ஒருவரை ஒருவர் மீண்டும் கட்டியணைப்போம்
என்று கூறினார்.
இனி தயவு செய்து மனவருத்தத்தை நிறுத்துங்கள். உங்களை மேலும் சமாதானப்படுத்தும் நிலை எங்களிடம் இல்லை. மீண்டும் BN-க்கு திரும்புங்கள் எனத் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



