2025 தீபாவளிச் சந்தையை முன்னிட்டு தலைநகரில் சில சாலைகள் மூடப்படும்!
- Muthu Kumar
- 03 Oct, 2025
கோலாலம்பூர், அக்.3-
இவ்வாண்டுக்கான தீபாவளிச் சந்தையை முன்னிட்டு தலைநகரில் தேர்வு செய்யப்பட்ட சில இடங்களில் ஒரு பகுதிச் சாலைகள் கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கி வரும் 19ஆம் தேதி வரை மூடப்படவிருக்கின்றன.
விற்பனை மிகவும் சிறப்பாக நடைபெற மற்றும் சந்தை இருக்கும் காலம் முழுவதும் வருகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த சாலை மூடும் நடவடிக்கை குறித்துத் தெரியப்படுத்தப்படுவதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்தது.
இதில் மூடப்படவிருக்கும் சாலைகளில் ஜாலான் போனஸ் 6 (ஜாலான் மஸ்ஜிட் இந்தியா).ஜாலான் ராக்யாட் (பிரிக்பீல்ட்ஸ்), ஜாலான் துன் சம்பந்தன் (சென்ட்ரல் சூட்ஸ் முன்புறம் மற்றும் பிரிக்பீல்ட்ஸ், லிட்டல் இந்தியா), லோரோங் சான் ஆ தோங் ஆகியவை அடங்கும்.இந்த சாலை மூடப்படும் நடவடிக்கை 2025 தீபாவளிச் சந்தை சிறப்பாக நடைபெற வழி விடுவதற்கு ஆகும். இது பெருநாள் வணிகர்களுக்குப் பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.
ஆகையால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கத் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு மாற்றுப் பாதையைப் பயன்படுத்தும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக ஓர் அறிக்கையில் மாநகர் மன்றம் குறிப்பிட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



