இல்லமா? இன்னும் சிறையா? - நஜிப்பிற்கு இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு!
- Shan Siva
- 22 Dec, 2025
கோலாலம்பூர், டிச 22: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் கோலாலம்பூர் இல்லமான ஜாலான் லங்காக் டூத்தா பகுதியில் நேற்று இரவிலிருந்து பரபரப்பு அதிகரித்துள்ளது. நஜிப் மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி வழங்கப்படுமா? என்ற முக்கிய நீதிமன்ற தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், அவரது இல்லத்திற்கு ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு வருகின்றனர்.
இந்தத் தீர்ப்பை முன்னிட்டு, நஜிப் ஆதரவாளர்கள் அவரது இல்லத்தில் “சொலாத் ஹாஜத்” எனப்படும் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டதாக Berita Harian செய்தி தெரிவித்துள்ளது. கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் காலை இன்னும் சில ம்ணித்துளிகளில் தீர்ப்பை அறிவிக்க உள்ளது. இந்த தீர்ப்பை உயர் நீதிமன்ற நீதிபதி அலிஸ் லோக் வழங்க உள்ளார்.
நஜிப் ரசாக், SRC International நிறுவனத்துக்குச் சொந்தமான RM42 மில்லியன் நிதியை தவறாக பயன்படுத்திய வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். இதனையடுத்து, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் காஜாங் சிறையில் அவர் தண்டனை அனுபவித்து வருகிறார். நஜிப் தரப்பில், மன்னிப்பு வாரியத்தின் தீர்ப்புடன் தொடர்புடைய ஒரு அரச குடும்ப இணைப்பு ஆணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரி, கடந்த ஆண்டு நீதிமன்ற மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த இணைப்பு ஆணை மாட்சிமை தங்கிய மலேசிய 16வது மாமன்னர் வழங்கியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், UMNO தலைவர் அக்மத் ஸாஹித் ஹமிடி, மீண்டும் தனது கருத்தைத் தெரிவித்தார். அதில், நஜீப் ரசாக் மூன்று ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவருக்கு முழுமையான அரச மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



