நீதிபதியை மாற்றுவதில் டோமி தாமஸ் வெற்றி!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூலை 5-

அம்னோவின் மூத்த தலைவர் டான்ஸ்ரீ ஷாரிர் அப்துல் சமாட் தம்மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கை நடத்திவரும் உயர்நீதிமன்ற நீதிபதி ரோஸ் மாவார் ரோஸாய்னை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கக் கோரி சட்டத்துறை முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ டோமி தாமஸ் செய்திருந்த விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டது.

அவ்வழக்கை இனிவரும் காலங்களில் ரோஸ் மாவார் செவிமடுக்கக் கூடாது எனும் டோமி தாமஸின் மேல்முறையீட்டை நீதிபதி சுப்பாங் லியான் தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு ஏற்றுக் கொண்டது.

தமக்கு எதிரான வழக்குத் தொடர்பில் நீதிபதி ரோஸ் மாவார், பல்வேறு அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும் முரண்பாடான அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார் என்று கடந்தாண்டு ஆகஸ்டு 26ஆம் தேதியன்று தாக்கல் செய்த தமது விண்ணப்பத்தில் டோமி தாமஸ் குறிப்பிட்டிருந்தார். அதனால், அவரை வழக்கை விசாரிப்பதினின்றும் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். ஆனால், அதனை ரோஸ் மாவார் நிராகரித்தார்.

அதனைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் டோமி தாமஸ் மேல்முறையீடு
செய்திருந்தார். முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடமிருந்து பத்து லட்சம் வெள்ளிக்கான காசோலையைப் பெற்றது குறித்து அதிகாரிகளிடம் அறிவிக்காத காரணத்தால் ஷாரிர் மீது கடந்த 2020ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டது. ஆயினும், ஜொகூர்பாரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், 2023ஆம் ஆண்டு ஜனவரியில் விடுவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, அப்போதைய சட்டத்துறைத் தலைவர் டோமி தாமஸ், எம்ஏசிசியின் முன்னாள் தலைவர் லத்திபா கோயா ஆகியோர் மீது ஷாரிர் வழக்குத் தொடர்ந்தார்.

Mahkamah Rayuan membenarkan permohonan bekas Peguam Negara, Tommy Thomas, untuk menggugurkan Hakim Roz Mawar daripada mendengar saman fitnah oleh Tan Sri Shahrir Samad. Thomas mendakwa hakim berkenaan membuat kenyataan bercanggah dan tidak berasas mengenai kes tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *