இனி சமரசம் இல்லை... பள்ளிகளில் கடும் நடவடிக்கை! - அன்வார் எச்சரிக்கை
- Shan Siva
- 15 Oct, 2025
புத்ராஜெயா, அக் 15: சமூக ஊடகங்களின் பயன்பாடு மற்றும் செல்வாக்குடன் தொடர்புடையவை உட்பட, பள்ளிகளில் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பள்ளிகளில் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்து இன்று அல்லது நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, உடனடியாக செயல்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை அடையாளம் காணப்படும் என்று அன்வார் கூறினார்.
பள்ளிகளில் சில பிரச்சினைகள் முன்னர் தீர்க்கப்பட்டிருந்தாலும், தற்போதைய பல சம்பவங்கள் மாணவர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப சூழ்நிலைகளுடனும், ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடக தளங்களின் பரவலான பயன்பாட்டுடனும் தொடர்புடையதாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.
இந்தப் பிரச்சினை குறித்து விரைவில் ஒரு கூட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினர்.
எனவே இன்று அல்லது நாளை இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க அமைச்சரவைக் கூட்டத்தை தாம் கூட்டப்போவதாக அவர் கூறினார்.
அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் இன்று நிதி அமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நடவடிக்கைகள் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தினாலும், மாணவர் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பில் அரசாங்கம் சமரசம் செய்ய முடியாது என்று அன்வார் மேலும் கூறினார்.
உறுதியான நடவடிக்கை அவசியம். இந்த பிரச்சினைகள் தொடர அனுமதிக்க முடியாது, ஏனெனில் அவை அனைத்தும் சமூக ஊடகங்களின் செல்வாக்கிலிருந்து உருவாகின்றன என்று அவர் கூறினார்!
*
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



