இனி அரசுத் துறை நிகழ்வுகளில் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் வேண்டாம்! - அன்வார் உத்தரவு
- Shan Siva
- 20 Jun, 2025
புத்ராஜெயா, ஜூன் 20: உள்ளூர் பொருட்களை ஊக்குவிக்கும் விதமாக. அனைத்து அரசுத் துறைகளும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை, குறிப்பாக உணவு வகைகளை, தங்களின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளில் பயன்படுத்துவதை நிறுத்துமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு அரசுத்
துறையும் இந்த உத்தரவைப் பின்பற்றினால், அது நமது விவசாயிகள்
உள்ளூர் உணவுப் பொருட்களை வழங்க அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர்
கூறினார்.
அனைத்து
அதிகாரப்பூர்வ நிகழ்வுகளிலும் உள்ளூர் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு
உறுதிபூண்டுள்ளதாக அண்டை நாடுகளின் உதாரணத்தையும் பிரதமர் மேற்கோள் காட்டினார்.
லாவோஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்தில், அரசு நடத்தும் எந்தவொரு
அதிகாரப்பூர்வ நிகழ்விலும் தமக்கு இறக்குமதி செய்யப்பட்ட உணவு வழங்கப்படவில்லை. உள்ளூர்
உணவு மட்டுமே வழங்கப்பட்டதாக அவர் நினைவு கூர்ந்தார்.
அரசாங்கத்தின்
தெளிவான நிலைப்பாடு இருந்தபோதிலும்,
இறக்குமதி செய்யப்பட்ட
உணவுப் பொருட்களுக்கு சில கட்சிகள் முன்னுரிமை அளிப்பதையும் அன்வார் விமர்சித்தார்.
உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு இந்த நடைமுறை முரணானது என்று கூறிய அவர், உள்நாட்டு விளைபொருட்களை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் புரிந்துகொண்டு, அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்!
Perdana Menteri Anwar Ibrahim mengarahkan semua jabatan kerajaan hentikan penggunaan makanan import dalam acara rasmi. Langkah ini galakkan penggunaan produk tempatan, bantu petani tempatan pasarkan hasil mereka dan kukuhkan ekonomi negara melalui amalan mesra tempatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



