மலாய் அல்லாத வாக்காளர்கள் இனி DAP-க்கு இல்லை! - இஸ்மாயில் சப்ரி
- Shan Siva
- 04 Jul, 2026
ஜொகூர், ஜூலை 4: மலாய் அல்லாத வாக்காளர்களை இனி டிஏபி-யின் நிலையான
வைப்புத்தொகை என்று கருத முடியாது என முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி
யாக்கோப் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சபா மாநிலத் தேர்தலில் டிஏபி-யின் எட்டு
வேட்பாளர்களும் தோற்கடிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
மலாய் அல்லாத வாக்காளர்களிடமிருந்து பாரிசான் நேஷனலுக்குத் தற்போது கிடைக்கும்
ஆதரவைக் கருத்தில் கொண்டு, ஜொகூரிலும் இதேபோன்ற ஒரு போக்கு உருவாகக்கூடும் என்று இஸ்மாயில் கூறினார்.
மலாய் அல்லாத வாக்காளர்கள் பாரிசான் நேஷனலை ஆதரிக்க மாட்டார்கள் என்ற
நீண்டகாலக் கருத்து இனி சரியானதல்ல என்று கூறினார்.
செரோம் தொகுதியில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் நதிரா அஃபிகா அப்துல் ரஹீமுக்காக பிரச்சாரம் செய்தபோது அவர் இவ்வாறு கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



