லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் 2025: சிவசங்கரி, இயைன் யோ அரையிறுதிக்கு முன்னேறினர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 7-

மலேசியாவின் மகளிர் ஸ்குவாஷ் நட்சத்திரம் எஸ். சிவசங்கரி, 2025 லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார்.

லண்டனில் உள்ள அலெக்ஸாண்ட்ரா பேலஸில் நடைபெற்ற ஸ்குவாஷ் சங்கத்தின் (பிஎஸ்ஏ) உலக டூர் தங்க நிலைப் போட்டியின் காலிறுதியில், உள்ளூர் வீராங்கனை ஜாஸ்மின் ஹட்டனை 11-9, 11-5 என்ற கணக்கில் 20 நிமிடங்களில் வீழ்த்தினார்.

2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரும், நடப்புச் சாம்பியனுமான சிவசங்கரி, அரையிறுதியில் உலக தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள எகிப்து வீராங்கனை அமினா ஓர்பியை எதிர்கொள்வார்.

இதற்கிடையில், மலேசிய ஆடவர் ஸ்குவாஷ் வீரர் இயைன் யோவும் அரையிறுதிக்கு முன்னேறினார். உலக தரவரிசையில் 12ஆவது இடத்தில் உள்ள இயைன் யோ, மர்வான் 11-9, 11-9 என்ற கணக்கில் தோற்கடித்தார். இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டைப் பெற, இயைன் யோ, உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள நியூசிலாந்து வீரர் பால் கோலை எதிர்கொள்வார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *