மக்காவ் ஓபன் 2025இல் சிறப்பாக விளையாடி பெருமை சேர்த்த மலேசிய வீரர்களுக்கு வாழ்த்துகள்- தெங்கு ஸாப்ருல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 5-

மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைவர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஸப்ருல் அப்துல் அஜிஸ், மக்காவ் ஓபன் 2025-ல் சிறப்பாக விளையாடி பெருமை சேர்த்த மலேசிய வீரர்களுக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவு செய்த அவர், மூன்று பிரிவுகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி. ஒரு பட்டத்தை வென்ற வீரர்களின் உயர்ந்த போராட்ட உணர்வை புகழ்ந்தார்.

அனைத்து வீரர்களுக்கும் உயர்ந்த போராட்ட உணர்விற்காக வாழ்த்துகளும் பாராட்டுகளும் என்று அவர் தமது எக்ஸ் தளத்தில் எழுதியிருந்தார்.கவனம் முழுவதும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வரலாறு படைத்த வான் அரிப் வான் ஜுனைடி-யாப் ராய் கிங் ஜோடியை நோக்கி திரும்பியது. இந்த ஜோடி, உலகின் 8-ஆவது தரவரிசை இந்தோனேசிய ஜோடியான சபார் கர்யமான் குட்டாமா-மொஹ் ரேஸா பஹ்லேவி இஸ்பஹானியை 22-20, 21-18 என்ற கணக்கில் வீழ்த்தி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவுக்கு ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வென்று கொடுத்தனர்.

மூன்று பிரிவுகளில் மலேசிய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அணியின் ஒட்டுமொத்த வலிமையை எடுத்துக்காட்டுகிறது. தெங்கு ஸப்ருல், இந்த வெற்றி மலேசிய பேட்மிண்டனின் புதிய எழுச்சியை குறிக்கிறது என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த சாதனை, அடுத்து நடைபெறவுள்ள உலகளாவிய போட்டிகளுக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது. வான் அரிப்-யாப் ஜோடியின் இந்த வெற்றி, ஸ்பெயின் மாஸ்டர்ஸ் தோல்விக்கு பழிவாங்குவதாகவும், மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்த கசப்பை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் அமைந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *