மாணவர்களின் பயணங்களைக் கண்காணியுங்கள்-பல்கலைக்கழகங்களுக்கு வலியுறுத்தல்!

- Muthu Kumar
- 30 Jun, 2025
ஜெர்த்தே, ஜூன் 30-
மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் பயணத் திட்டங்களை உயர்கல்விக் கழகங்கள் அணுக்கமாக கண்காணித்து வரவேண்டும். விடுமுறைக் காலங்களில் தத்தம் ஊர்களுக்கு வாடகைப் பேருந்துகள் மூலம் செல்ல மாணவர்கள் ஏற்பாடு செய்யும் பயணங்களும் இதில் உள்ளடங்கும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.
விபத்துகளைத் தவிர்ப்பதற்கு இது அவசியமாகும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். மாணவர்களுடன் அணுக்கமாக தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள்
சொந்தமாக ஏற்பாடு செய்யும் பயணங்களைக் கண்காணியுங்கள் என்றும் பல்கலைக்கழகங்களைத் தாம் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.இம்மாதம் 9 ஆம் தேதி பேராக். கிரீக்கில் வாடகைப் பேருந்தொன்று விபத்தில் சிக்கியதில் உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பதினைந்து மாணவர்கள் உயிரிழந்தனர்.
திரெங்கானுவில் தங்கள் சொந்த ஊரிலிருந்து பேராக்கில் உள்ள உப்சி பல்கலைக்கழகத்திற்கு அம்மாணவர்கள் இரவு நேரத்தில் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் அவர்களின் பேருந்து விபத்தில் சிக்கியது.விபத்துகளைத் தவிர்க்க, மாணவர்களை பகல் நேரத்தில் மட்டுமே பயணம் செய்ய அனுமதிப்பது உட்பட பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றை நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பரிந்துரைகளும் அதில் அடங்கும் என்றார் டாக்டர் ஸம்ரி.
Menteri Pendidikan Tinggi menggesa universiti memantau perjalanan pelajar semasa cuti, terutama yang menggunakan bas sewaan. Ini susulan nahas di Perak yang mengorbankan 15 pelajar. Beberapa cadangan keselamatan sedang dipertimbangkan, termasuk hadkan perjalanan pada waktu siang sahaja.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *