ONLINE சூதாட்டம் நடத்திய 11 வெளிநாட்டினர் கைது!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 12,

கோலாலம்பூரில் ஆன்லைன் சூதாட்டம் நடத்திய சீனாவைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார். தலைநகர் P RAMLEE சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் மேல் தலத்தில் சட்டவிரோதச் செயல்கள் மேற்கொள்வதாகப் பொதுமக்களிடமிருந்து புகார் பெற்றதும் இச்சோதனையை மேற்கொண்டதாக Datuk Zakaria Shaaban தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட 11 பேருன் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 10 ஆண்கள் ஒரு பெண் என Datuk Zakaria Shaaban தெரிவித்தார். WHATSAPP, TELEGRAM, FACEBOOK  போன்ற சமூகவலைத்தலங்களின் மூலம் சட்டவிரோதமாகச் சூதாட்டத்தை நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சோதனையின் போது 7 சீனா பாஸ்போர்ட்களும், 11 மடிக்கணினிகளையும், சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பப் பொருள்களுடன் 3,900 ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *