போலி வணிகத்தில் ஈடுபட்ட 13 வெளிநாட்டினர் கைது!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 11,

அன்லைன் மூலமாகப் போலி வணிக முதலீடுகளை உருவாக்கி மோசடி செய்து வந்ததாக நம்பப்படும் 13 வெளிநாட்டினர்களைக் காவல்துறை கைது செய்துள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர்  Dato Shazeli Kahar தெரிவித்தார். சம்மந்தப்பட்ட கும்பலைக் கடந்த 1 வாரமாகப் பின் தொடர்ந்து நேற்றிரவு காஜாங் செமின்ஞியில் உள்ள ஒரு வணிகக் கடையில் இச்சோதனையை மேற்கொண்டதாகவும் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர்  Dato Shazeli Kahar தெரிவித்தார்.

ஜப்பானில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தை அடிப்படையாகக் கொண்டு 13 பேர் கொண்ட இந்த கும்பல் ஆன்லைன்னில் பலரையும் முதலீடு செய்யும்படி வலியுறுத்தி மோசடிகளைப் புரிந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர்  Dato Shazeli Kahar தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்கள் 2 பெண்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து 11 விவேகக் கைத்தொலைப்பேசிகளும் 11 மடிக்கணினிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர்  Dato Shazeli Kahar தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *