எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரசாரம், வெற்று வாக்குறுதிகளை வழங்குகின்றன – ஒன் ஹபீஸ் குற்றச்சாட்டு
- Surendran Sumdraraj
- 06 Jul, 2026
ஜொகூர் பாரு, ஜூலை 6 –
ஜொகூர் மாநிலத் தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற தூண்டுதல், அவதூறு மற்றும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி வருவதாக டத்தோ ஒன் ஹபீஸ் காசி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளி பதிவில் அவர், ஜொகூர் மக்கள் இத்தகைய அரசியல் உத்திகளால் எளிதில் ஏமாற மாட்டார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
2018 மற்றும் 2022 பொதுத் தேர்தல்களிலும் இதேபோன்ற அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறிய அவர், அந்த அனுபவங்களில் இருந்து மக்கள் ஏற்கனவே பாடம் கற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
“கவனிக்காமலேயே ஜொகூர் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு வாரம் நிறைவடைந்துள்ளது. நாம் எதிர்பார்த்ததுபோல, எதிர்க்கட்சிகள் தூண்டுதல், அவதூறு மற்றும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைப் பயன்படுத்தி ‘பங்சா ஜொகூர்’ மக்களின் வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றன,” என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



