அம்னோவிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் அம்னோ சேர்த்துக் கொள்ள வேண்டும்!

top-news

ஜூன் 21,


அம்னோவிலிருந்து ஒரு சில காரணங்களுக்காக நீக்கப்பட்ட முக்கிய தலைவர்களும் அவர்களின் ஆதரவாளர்களையும் மீண்டும் அம்னோவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஜொகூர் மெந்திரி பெசாரும் ஜொகூர் மாநில அம்னோ தொடர்புக் குழுத் தலைவருமான Datuk Onn Hafiz Ghazi வலியுறுத்தினார். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல என்றும் மாறாக இது Sembrong மாவட்ட அம்னோவின் தீர்மானம் என Datuk Onn Hafiz Ghazi தெரிவித்தார். கடந்த Sembrong மாவட்ட அம்னோவின் ஆண்டுக் கூட்டத்தில் ஜொகூர் அம்னோவின் முக்கிய தலைவரான Datuk Seri Hishammuddin Hussein மீண்டும் அம்னோவுக்குத் திரும்ப வலியுறுத்துவதாகத் தீர்மானம் ஏற்றியதை Datuk Onn Hafiz Ghazi சுட்டிக்காட்டினார்.

எனது இளமை காலத்தில் எனக்கு அரசியல் வழிகாட்டியாக இருந்தவர் Datuk Seri Hishammuddin Hussein என Datuk Onn Hafiz Ghazi தெரிவித்தார். Datuk Seri Hishammuddin Hussein ஆளுமையில் அம்னோவைப் பற்றி என் இளமை காலத்தில் நான் அதிகமாகப் புரிந்துக்கொண்டதாகவும் அம்னோவின் மீது தீவிர பற்றுக் கொண்ட முக்கிய தலைவர்களில் Datuk Seri Hishammuddin Hussein ஒருவர் என்பதைத் தாம் தனிப்பட்ட முறையில் அறிந்திருப்பதால் அவரை மீண்டும் அம்னோவில் இணைத்து அம்னோ மேலும் வலுப்பெற வேண்டும் என தேசிய அம்னோவுக்கு ஜொகூர் மெந்திரி பெசாரும் ஜொகூர் மாநில அம்னோ தொடர்புக் குழுத் தலைவருமான Datuk Onn Hafiz Ghazi வலியுறுத்தினார்.


Menteri Besar Johor, Datuk Onn Hafiz Ghazi menyeru agar UMNO menerima semula pemimpin yang disingkir termasuk Datuk Seri Hishammuddin Hussein. Beliau menyatakan ini sebagai usul Sembrong UMNO demi menguatkan kembali parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *