பள்ளிகள் உள்ள பகுதிகளில் போக்குவரத்து வேக வரம்பு மணிக்கு 30 கிமீட்டராக குறைக்க பரிசீலனை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 24: நாடு முழுவதும் உள்ள பள்ளி மண்டலங்களில் மணிக்கு 30 கிமீ வேக வரம்பை அறிமுகப்படுத்துவதற்காக, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் கீழ் விதிகளில் திருத்தங்களை போக்குவரத்து அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பள்ளி மண்டலங்களில் தற்போதைய அதிகபட்ச வேக வரம்பான மணிக்கு 50 கிலோமீட்டர் வேக வரம்பை, மணிக்கு 30 கிமீ வேக வரம்பாக  குறைப்பதற்கான அமலாக்க வழிமுறைகள் குறித்து கேட்ட PN–சபா பெர்னாம் கலாம் சலான் கேள்விக்கு லோக் இவ்வாறு பதிலளித்தார்.

துணைப் பிரதமர் தலைமையிலான சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் தொடர்பான அமைச்சரவைக் குழு (JKMKKJR) மூலம், மாணவர்கள் மற்றும் பள்ளி சமூகத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, பள்ளி மண்டலங்களில் மணிக்கு 30 கிமீ வேக வரம்பை தேசியக் கொள்கையாக ஏற்றுக்கொள்ள அரசாங்கம் ஜூலை 15, 2024 அன்று ஒப்புக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *