எம்.பி.க்களுக்கான தொகுதி ஒதுக்கீடுகள்… PN அதிகாரப்பூர்வ கோரிக்கை

- Shan Siva
- 17 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 17: பெரிகாத்தான் நேஷனல் தனது எம்.பி.க்களுக்கான தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்க அதிகாரப்பூர்வமாக ஒரு கோரிக்கையை சமர்ப்பித்துள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் உறுதிப்படுத்தினார்.
பெரிகாத்தான் தலைமை கொறடா டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹசான் கடந்த வெள்ளிக்கிழமை
விண்ணப்பக் கடிதத்தை அனுப்பியதாக ஃபடில்லா கூறினார்.
கோரிக்கையை மறுபரிசீலனை செய்து அதற்கேற்ப பதிலளிப்பதாக துணைப் பிரதமர் கூறியதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பாக மத்திய அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பும் தனது விருப்பத்தை தக்கியுதீன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
Timbalan Perdana Menteri, Datuk Seri Fadillah Yusof mengesahkan Perikatan Nasional telah mengemukakan permohonan rasmi mengenai peruntukan kawasan untuk Ahli Parlimennya. Permohonan dihantar oleh Ketua Whip PN, Datuk Seri Takiyuddin Hassan, dan akan dikaji semula sebelum keputusan dibuat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *