ஆதாரங்களை அழிக்க 10 லட்சம் ரிங்கிட்டை எரிக்க முற்பட்டார் கட்டுமான திட்ட நிர்வாகி!
- Muthu Kumar
- 20 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 20-
தரவு மைய கட்டுமானத் திட்டத்தில் ஊழல் செய்ததாக, சந்தேகத்தின் பேரில் எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் கைது செய்யப்பட்ட ஒரு முக்கியக் கட்டுமான நிறுவனத்தின் திட்ட நிர்வாகி, ஆதாரங்களை அழிக்க சுமார் 10 லட்சம் ரிங்கிட் ரொக்கப் பணத்தை எரிக்க முற்பட்டார்.
எம்ஏசிசி மேற்கொண்ட பரிசோதனையால் அதிர்ச்சியடைந்த அந்த ஆடவர், அச்செயலை செய்ய முற்பட்டதாக அந்த ஆணையம் கூறியது. பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 100 ரிங்கிட் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டுடெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எம்ஏசிசி அதிகாரிகளின் வருகையை அறிந்த அந்த ஆடவர், ரொக்கப் பணங்கள் அடங்கிய மூட்டைகளை எரித்து அப்புறப்படுத்த முயன்றதாக நம்பப்படுகிறது.வீட்டின் கதவு திருக்குப்பட்ட எம்ஏசிசி அதிகாரிகள், குளியலறையிலிருந்து வரும் அடர்ந்த புகை வீடு நிரம்பியிருப்பதைக் கண்டறிந்தனர்.
பின்னர் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 10 லட்சம் மதிப்புள்ள எரிந்த நிலையில் இருந்த 100 ரிங்கிட் நோட்டுகளைக் கண்டுடெடுத்தனர். வீட்டில் மேற்கொள்ளப்பட்ட முழு சோதனைக்கு பிறகு. தலையணை வைக்கும் பல பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 75 லட்சம் ரிங்கிட் ரொக்கப் பணத்தையும் எஸ்பிஆர்எம் கண்டறிந்தது.
ரோலெக்ஸ், ஒமேகா, கார்தியர் ரகத்திலான கைக்கடிகாரங்கள், மோதிரம் மற்றும் தங்க காசுகளும் இச்சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



