குறைகளை பொதுவில் பேசாதீர்கள்! தேமு கட்சிகளுக்கு முகமட் ஹசான் வேண்டுகோள்!
- Muthu Kumar
- 06 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 6-
தேசிய முன்னணி பங்காளிக் கட்சிகள், தங்களின் குறைகளை வெளிப்படையாகப் பேசக் கூடாது என்று, அக்கூட்டணியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான் வலியுறுத்தியுள்ளார். உறுப்புக் கட்சிகள் மத்தியிலான தவறான புரிந்துணர்வுகள், கூட்டணிக்குள்ளேயே அவசியம் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் கூட்டணியை பலப்படுத்துவதே அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்றும் முஹமட் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய முன்னணி உதயமான நாளில் இருந்து அம்னோ, மஇகா மற்றும் மசீச ஆகியவை அக்கூட்டணியில் நீடித்து வருவதாகக் கூறிய முஹமட், தங்களுக்கு இடையிலான அதிருப்தியை அவை பொதுவில் வெளிப்படுத்தக் கூடாது என்றார்.
'கணவன்-மனைவி உட்பட எந்த ஒரு கூட்டணியிலும் சர்ச்சைகள் இருக்கத்தான் செய்யும். நமது பல ஆண்டு கால நட்பை இத்தகைய சிறிய பிரச்சினைகள் பாதிக்கச் செய்துவிடக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். "அனைத்து கட்சிகளும் சாந்தமடைந்து தங்களின் குற்றச்சாட்டுகளை கிடப்பில் போடும் என்று நான் நம்புகிறேன். இப்போதைக்கு முக்கியம் என்னவென்றால் தேசிய முன்னணி மீண்டும் எழுச்சிபெற வேண்டும் என்பதுதான் "என்று முஹமட் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



