அவரை குறை சொல்ல வேண்டாம்! மகள் இறப்புக்கு காரணமான ஓட்டுநரருக்காக சிறுமியின் தந்தை வேண்டுகோள்!
- Shan Siva
- 06 May, 2026
ஜொகூர், மே 6: ஜொகூர், பாரிட் சுலோங்கில் உள்ள எஸ்.கே. ஶ்ரீ மைமோன் பள்ளிக்கு வெளியே நடந்த வேன் விபத்தில் தனது எட்டு வயது மகள் உயிரிழந்த நிலையில், அந்த ஓட்டுநரைத் தான் மன்னித்துவிட்டதாகவும், பொதுமக்கள் அவரைக் குறை கூற வேண்டாம் என்றும் இறந்த சிறுமியின் தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
39 வயதான அஹ்மத் ஃபரீஸ் காலிட் எனும் அந்த நபர், சினார் ஹரியான் செய்தி நிறுவனத்திடம், தங்கள் குடும்பம் இந்தத் துயரத்தை விதியாக ஏற்றுக்கொள்வதாகவும், இது நடக்க வேண்டும் என்று யாரும் விரும்பவில்லை என்பதை வலியுறுத்தி, கருணையுடன் நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
ஓட்டுநர் மீது மக்கள் கோபப்பட வேண்டாம் என்பதே தனது வேண்டுகோள். பெற்றோர்களாகிய நாங்கள் இதை ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட நிலையில், மற்றவர்கள் தொடர்ந்து அவரைக் குறை கூற வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் கருணையுடன் நடந்துகொள்ளுங்கள் என்று அவர் கூறினார்.
மே 5 அன்று, பள்ளியின் வாயிலுக்கு வெளியே வேன் மோதியதில், பாதிக்கப்பட்ட 8 வயதான நூர் ஐனி உமைரா முகமது ஃபரீஸ் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



