ஜாலூர் கெமிலாங்கை பறக்கவிட பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம்-சைஃபுதின் நசித்தியோன்!
- Muthu Kumar
- 24 Aug, 2025
பண்டார் பாரு, ஆக.24-
தேசியக் கொடி தலைகீழாக பறக்கவிடப்பட்ட சம்பவம் தற்செயலாக நிகழ்ந்தது என நிரூபிக்கப்படும் நிலையில் ஜாலூர் கெமிலாங்கை பறக்கவிட பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதை மிகைப்படுத்தக்கூடாது.
இப்பிரச்சினை தொடர்பாக புகார் கிடைத்தால், போலீஸ் முதலில் விசாரணையை மேற்கொண்டு அது தற்செயலாக நிகழ்ந்ததா என்பதைத் தீர்மானிப்பார்கள் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீசைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் விளக்கினார்.
"விசாரணையின் போது, அத்தவறு கேலி செய்யும் நோக்கத்துடன் வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது நாட்டுப்பற்றை தெளிவாகக் காட்டாத நோக்கத்துடன், சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டதா என்பதை நாங்கள் அணுகுவோம்.
விசாரணை அதை நிரூபித்தால்,சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் விசாரணையின் முடிவுகள் அது தற்செயலாக செய்த தவறு என்று கண்டறிந்தால், நிச்சயமாக அதை மிகைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை," என்றார் அவர்.நேற்று சனிக்கிழமை, கெடா, பண்டார் பாருவில் உள்துறை அமைச்சின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
விசாரணையில் தேசிய சின்னத்தை கேலி செய்யும் நோக்கம் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சைஃபுடின் விவரித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



