எதிரிகளுக்கு ஆயுதம் கொடுக்காதீர்கள்! - பாஸ் வலியுறுத்து
- Shan Siva
- 29 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 29: பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தலைவர் பதவி தொடர்பாக உருவாகியுள்ள உள்கட்சி மோதல்கள் குறித்து, PAS துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நண்பர்களுக்கிடையேயான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
PN கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும், ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டுவதற்குப் பதிலாக, உண்மையான அரசியல் எதிரிகள்மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பொதுவெளியில் நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும். உள்கட்சிப் பிரச்சினைகளை, கட்சியின் நடைமுறைகள் மூலம் விவேகமாகத் தீர்க்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் PN மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், இதுவரை உருவாக்கியுள்ள ஒற்றுமை, குறிப்பாக பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணியை பதற்றமடையச் செய்யும் ஒன்றாக இருப்பதாகவும் துவான் இப்ராஹிம் கூறினார்.
எங்கள் எதிரிகளுக்கு நம்மை பிளவுபடுத்த ஆயுதம் கொடுக்க வேண்டாம். கருத்து வேறுபாடுகளை முதிர்ச்சியுடன் கையாள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பஹாங் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான துவான் இப்ராஹிம், அரசியல் கூட்டணிகளில், அனைத்து கட்சிகளுக்கும் விருப்பமான அனைத்தும் கிடைப்பது சாத்தியமில்லை என்றும்,
சமரசம் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், பரஸ்பர மரியாதையும், கூட்டணியின் அடிப்படை ஒப்பந்தங்களில் உறுதியாக இருப்பதும், நமது பலமாக அமையும் என்றார்.
மேலும், கூட்டணி நண்பர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசுவதை நிறுத்துங்கள். பின்னால் குத்துவதையும், ஒருவர் தடுமாறும்போது மகிழ்ச்சி அடைவதையும் தவிர்க்க வேண்டும்,”
என்று அவர் எச்சரித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



