ஷா ஆலமில் தொடர் கனமழை! - பல சாலைகள் மூடல்
- Shan Siva
- 25 Nov, 2025
ஷா ஆலம், நவ 25: ஷா ஆலாமில் இடைவிடாது பெய்த கனமழையைத் தொடர்ந்து பல சாலைகள் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மூடப்பட்டுள்ளதாக ஷா ஆலம் நகர சபை (MBSA) தெரிவித்துள்ளது.
சாலை பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஜாலான் செக்சியன் 19, செக்சியன் 24, செக்சியன் 23, பெர்சியாரன் ஜூப்லி பேராக் மற்றும் பெர்சியாரன் பெருசஹான் ஆகிய பகுதிகளை போலீசார் மூடிவிட்டதாக MBSA ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், மாற்று வழிகளைப் பயன்படுத்தவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் அது அறிவுறுத்தியுள்ளது.
தாமன் தேசா கெமுனிங், செக்சியன் 35, கம்போங் புடிமான், செக்சியன் யு14, பெர்சியாரன் ஜூப்லி பேராக், செக்சியன் 19, தாமன் செரி மூடா, பதங் ஜாவா மற்றும் செக்சியன் 16 உள்ளிட்ட ஷா ஆலமில் உள்ள பல பகுதிகளை வெள்ளம் பாதித்துள்ளது.
சிலாங்கூரில் ஐந்து மாவட்டங்களில் உள்ள 109 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 327 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி எட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



