யாரும் அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதீங்க - நடிகர் ரவி மோகன் உருக்கம்!
- Muthu Kumar
- 21 Nov, 2025
உலக குறை பிரசவ தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் ரவி மோகன் உருக்கமாக பேசி உள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த ரவி மோகன் ஜெயம் படத்தில் மூலமாகத்தான் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படமே அவருடைய பெயருக்கு முன்பு அடையாளமாக இருந்தது. எடிட்டர் மோகனின் மகனான ரவி மோகன் ஜெயம் படத்தில் நடித்த பிறகு ஜெயம் ரவி என்று பெயரோடு இருந்தார். ஆனால் சமீபத்தில் அவர் ரவி மோகன் என்று தன்னுடைய பெயரை மாற்றம் செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன், தயாரிப்பாளர், இயக்குநர் என்று தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கும் ரவி மோகன் ஹீரோவாக நடித்துள்ள சீனி படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதேபோல அவர் வில்லனாக நடித்த பராசக்தி படமும் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ரவி மோகனுடன் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மற்றும் பல பிரபலங்களும் அந்த படத்தில் நடித்திருப்பதால் அந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.
அதேபோல ரவி மோகன் கடந்த வருடத்தில் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அவர் உலகக் குறை பிரசவ தினத்தை முன்னிட்டு குரோம்பேட்டை ரோலா மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருந்தார். அப்போது குரை பிரசவத்தில் பிறந்த 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் ரவி மோகன் பேசும் போது இங்கு வந்தது எனக்கு ரொம்பவும் சந்தோஷமா இருக்கு. இதை ஒரு முக்கியமான விஷயமாக எடுத்துக் கொண்டு மக்களிடம் கொண்டு செல்ல நீங்களும் வந்துள்ளது மகிழ்ச்சி. எங்கள் குடும்பத்திலும் இதே போல குறை பிரசவத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. மூடநம்பிக்கை, அந்த குழந்தையை குறை சொல்வது என நிறைய நாங்கள் பார்த்திருக்கிறோம்.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையால் அந்த குடும்பம் எவ்வளவு துன்பப்படும் என்பது எனக்கு நன்றாக தெரியும். அவர்களை பேச்சுக்கு கூட நீங்க ஏதாவது சொன்னால் கஷ்டமாக இருக்கும். இங்கு பேசியவர்களில் பேச்சைக் கேட்ட பிறகு இது ஒரு குறையே இல்லை என்பது எனக்கு புரிந்தது. எனவே குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதை தடுக்க வேண்டும், அதற்கு மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளையும் மக்கள் பின்பற்ற வேண்டும்.
மேலும் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை அவமானப்படுத்தும் வகைகளில் யாரும் வார்த்தைகளை மட்டும் விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை விளையாட்டுக்கு கூட நீங்க குறைப்பிரசவத்தில் பிறந்தவனே என்று சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர் பேசும் போது தன்னுடைய அடுத்த படமான ஜீனி ரிலீசுக்கு தயாராகி வருகிறது, பராசக்தி படம் பொங்கலுக்கு வர இருக்கிறது. அதேபோல ரஜினிகாந்த் கமல்ஹாசன் என இரு பெரும் லெஜெண்டுகள் ஒன்றாக ஒரே பிரேமில் பிளாக் அண்ட் ஒயிட்டில் பார்த்திருப்போம் இப்போ கலரில் பார்க்க ஆர்வமாய் இருக்கும் என்று பேசி இருந்தார். ரவி மோகன் பேசிய பிறகு அங்கிருந்த குழந்தைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களும் ரவிமோகனுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



