“ஹீரோக்கள்” போல் செயல்பட்டு நிலைமையை மேலும் மோசமாக்கி விடாதீர்கள்!
- Muthu Kumar
- 03 Oct, 2025
கோலாலம்பூர், அக். 3-
மலேசிய இயக்கவாதிகளை இஸ்ரேலிய ராணுவம் கைது செய்திருக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து பிரச்சினைகளை மேலும் அதிகப்படுத்திவிட வேண்டாம் அல்லது நிலைமையை மேலும் மோசமடையச் செய்துவிட வேண்டாம் என்றும், இளைஞர் தரப்பினருக்கு ஐசெக இளைஞர் பிரிவுத் தலைவர் வூ கா லியோங் நினைவுறுத்தியுள்ளார்.
காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்வதற்காக அங்கு பயணமாகி இருக்கும் கப்பல்களில் ஒன்றான குளோபல் சுமுட் ஃபுளோத்திலா கப்பலில் இருந்த மலேசியர்கள் பலர் நேற்று வியாழக்கிழமை இஸ்ரேலிய ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உதவி செய்ய முடியாவிட்டாலும், அனைத்து கைதிகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இளைஞர் தரப்பினர் பிரார்த்தனை செய்ய வேண்டும் என வூ கா லியோங் கேட்டுக் கொண்டார்.
“இளைஞர்கள் எனும் முறையில், நிலைமையை நாம் மேலும் மோசமாக்கிவிடக் கூடாது, பிரச்சினைகளை அதிகரிக்கக் கூடாது, ஹீரோக்கள்போல் நடந்து கொள்ளக் கூடாது அல்லது கைதாகி இருப்போரின் குடும்ப உறுப்பினர்களை சினமடையச் செய்யக் கூடாது."அனைவருக்கும் குடும்ப உறுப்பினர்கள் இருக்கின்றனர். கைதாகி இருப்போர் தங்களின் சொந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால் அதனால் ஏற்படக் கூடிய உணர்வை புரிந்து கொள்ளுங்கள்" என்று. முகநூலில் நேற்று பதிவிட்ட ஒரு செய்தியில் இளைஞர் தரப்பினருக்கு கா லியோங் நினைவுறுத்தினார்.
இதில் யாரின் பெயரையும் கா லியோங் குறிப்பிடவில்லை என்றாலும், இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேயை குறிவைத்து அவர் இவ்வாறு பேசியிருப்பதாக அறியப்படுகிறது.மத்திய தரைக்கடலில், இஸ்ரேலிய ராணுவத்தினரால் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ள மலேசியர்கள் விடுவிக்கப்படாவிட்டால், இம்மாத இறுதியில் நடைபெற விருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பை ரத்து செய்து விடுமாறு மலேசிய அரசாங்கத்தை அக்மால் வலியுறுத்தினார்.
இல்லையென்றால் கோலாலம்பூருக்கு டிரம்ப் வருகை தரும்பொழுது நாடு முழுவதிலும் உள்ள அம்னோ இளைஞர்கள் மிகப் பெரிய அளவில் எதிர்ப்புப் பேரணியை கடுமையென்றறி நீண்டு “டிரம்பை நாங்கள்
நேரடியாக எதிர்கொள்வோம். கைதாகி இருக்கும் எங்களின் வலியைப் போன்றது. குளோபல் சுமுட் ஃபுளோத்திலா கப்பலைச் சேர்ந்த இயக்கவாதிகளை விடுதலை செய்யுங்கள்" என்று மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினருமான அக்மால் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து பேசிய கா லியோங், இந்த விவகாரத்தில் பிரதமர்
டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று காலையிலேயே உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டு விட்டதாகத் தெரிவித்தார்.“அந்த அதிகாலையிலேயே அவசர சூழ்நிலையில் அன்வார் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். என்ன பேச வேண்டும் என்பது தொடர்பில் அறிக்கை தயாரிப்பதற்காக அவர் காத்திருக்கவும் இல்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



