போர்ட்டிக்சன் கடற்கரையில் சிப்பிகளை எடுக்க வேண்டாம்!- பொதுமக்களுக்கு அறிவுறுத்து
- Shan Siva
- 19 Sep, 2025
சிரம்பான், செப் 19: போர்ட் டிக்சனில் இருந்து சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கடல் நீர் மாதிரிகளை கோலாலம்பூர் மீன்வள உயிரியல் பாதுகாப்பு மையமான PBPKL பரிசோதித்ததில், அதில் நச்சுத் தனிமமான biotoxin அளவு 800 பார்ட்ஸ் பெர் பில்லியனுக்கு கீழ் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
எனினும், அப்பகுதியில் மஸல்ஸ் மற்றும் பிற சிப்பிகளை எடுத்துக்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்
என நெகிரி செம்பிலான் மீன்வளத் துறை (JPNS) இயக்குநர் காசிம்
தவீ தெரிவித்தார்.
நச்சுத் தனிம அளவு ஆபத்து அளவுக்கு கீழ் வந்துள்ளதாலும், இன்னும்
சில நாட்கள் கூடுதல் மாதிரிகளை எடுத்து அதன்
தன்மை குறித்து உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



