செராஸ் தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் விளையாட வேண்டாம்!
- Muthu Kumar
- 29 Jul, 2025
(கு.தேவேந்திரன்)
கோலாலம்பூர், ஜூலை 29-
செராஸ் தமிழ்ப்பள்ளியின் அருகே தற்போது கட்டப்பட்டு வரும் 42 மாடி கொண்ட ஆடம்பர அடுக்குமாடி வீட்டுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்று இப்பள்ளியின் மேலாளர் வாரியத் தலைவர் குமார் வீரன் தெரிவித்தார்.
நேற்று செராஸ் தமிழ்ப்பள்ளிக்கு திடீர் வருகை தந்த கோலாலம்பூர் மாநகர் மன்ற தலைவர் டத்தோ பண்டார் டத்தோஸ்ரீ மைமுனா முகமட் ஷாரிப்பிடம் எங்கள் உறுதிப்பாடான விளக்கத்தை அளித்துவிட்டோம் என்று குமார் கூறினார். பள்ளிக்கு வருகை தந்த டத்தோஸ்ரீ மைமுனாவிடம், டம், பள்ளியின் பள்ளி ஆரோக்கிய நிலையையும் அதன் சுற்றுச்சூழலையும் நாங்கள் எடுத்துரைத்தோம்.
ஆனாலும் மேம்பாட்டு நிறுவனத்துடன் பேச்சு நடத்துமாறு மைமுனா எங்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.அப்படி பேச்சு நடத்த விரும்பினால் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், மேம்பாட்டு நிறுவனம், கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஆகியவை இணைந்து கூட்டம் நடத்த வேண்டும் என்று தாம் திட்டவட்டமாக கூறியதாக குமார் கூறினார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் ஆகியவற்றுடன் இணைந்து பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோரும் மாணவர்களின் நலனில் கொண்டுதான் இந்த பிரச்சினையில் இறங்கியுள்ளோம்.
இப்போது வந்து மேம்பாட்டு நிறுவனத்துடன் பேசுங்கள் என்று சொல்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை.
மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்று நாங்கள் போராடி வருகின்றோம். இங்குள்ள சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது என்பதை என் சம்பந்தப்பட்ட தரப்பினர் உணர வேண்டும்.அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது என்று குமார் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



