மடியில் பெண்ணை வைத்து பேருந்து ஓட்டிய சர்ச்சை நபர் கைது
- Shan Siva
- 16 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 16 : மடியில் பெண்ணை அமரவைத்து விரைவுப் பேருந்தை ஓட்டி சர்ச்சையை ஏற்படுத்திய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
ஜாசின் காவல் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (PLUS) விரைவுப் பேருந்தை பெண்ணை மடியில் அமர வைத்து ஓட்டிச் சென்றதாகக கூறப்படும் செயல்கள் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக, சம்பந்தப்பட்ட 36 வயது ஆண் ஓட்டுநரும், 21 வயது பெண்ணும் நேற்று மாலை 4.30 மணிக்கு வந்தடைந்தனர்.
கோலாலம்பூரைச் சேர்ந்த அந்த நபருக்கு, கெடாவைச் சேர்ந்த அந்தப் பெண்ணை கடந்த ஐந்து மாதங்களாகத் தெரியும் என்றும், இருவரும் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் அளித்தது பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஜாசின் மாவட்டக் காவல் துறை தலைவர் லீ ராபர்ட் கூறினார்.
அந்தப் பெண் உற்சாகமாக இருந்ததாலும், பேருந்து ஓட்டக் கற்றுக்கொள்ள விரும்பியதாலும் இந்தச் செயலைச் செய்ததாக அந்த நபர் காரணம் கூறியதாக அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபருக்கு பேருந்து ஓட்டுவதில் 10 வருட அனுபவம் உள்ளது. அதேசமயம் அந்தப் பெண் மற்றொரு பேருந்து நிறுவனத்தில் பயணச்சீட்டு வழங்கும் பணியாளராகப் பணிபுரிகிறார் என்று கூறிய அவர், இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



