அவசரம் வேண்டாம்! ஹாடி அவாங் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 16: புதிய எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் எச்சரித்துள்ளார். இந்த செயல்முறைக்கு பெரிகாத்தான் நேஷனலில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே ஆழமான கலந்துரையாடல்கள் தேவை என்று அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி அணியில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களையும் இந்த முடிவு கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

மலேசியா ஒரு ஜனநாயக நாடு, எனவே நாம் மாறுபட்ட கருத்துக்களை மதிக்க வேண்டும். பாஸ் அவசர முடிவுகளை எடுப்பதில்லை. எதிர்க்கட்சியில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களையும் நாங்கள் கருத்தில் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதனால்தான் சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும் கருத்துக்களைச் சேகரிக்க சிறிது காலம் எடுத்துக்கொள்வதாக  அவர் இன்று கோலா தெரெங்கானுவில் உள்ள டத்தாரான் ஷாபந்தரில் நடைபெற்ற திரெங்கானு பாஸ் ஹரி ராயா கொண்டாட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *