மானிய விலையிலான ரோன் 95 பெட்ரோலை நிரப்ப அவசரப்பட வேண்டாம்-சில நாட்கள் காத்திருங்கள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 27-

மக்கள் மானிய விலையிலான ரோன் 95 பெட்ரோலை நிரப்ப அவசரப்பட வேண்டாம். சில நாட்கள் காத்திருக்கலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.பூடி மடானி முயற்சியின் மூலம் லிட்டருக்கு ரோன் 95 1.99 ரிங்கிட் வரை விலை விற்கப்படவுள்ளது.

இவ்விலை குறைப்பு இந்த மாத இறுதியில் அமலுக்கு வரவுள்ளது.ஆக மக்கள் பெட்ரோலை நிரப்ப பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நிற்க அவசரப்பட வேண்டாம்.அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி பொருளின் விலை அப்படியே இருக்கும். ஆகையால் மக்கள் சில நாட்கள் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

வரும் செப்டம்பர் 30 அன்று அனைவரும் அவசரமாக பெட்ரோலை நிரப்ப வேண்டிய அவசியமில்லை.இரண்டு அல்லது மூன்று நாட்கள் காத்திருங்கள். விலை அப்படியே தான் இருக்கும்.

நீங்கள் ஒரே நேரத்தில் டாங்கியை நிரப்பினால், அது அனைவருக்கும் சிரமமாக இருக்கும். நிதியமைச்சின் ஊழியர்களுடனான மாதாந்திர கூட்டத்துடன் இணைந்து ஆற்றிய உரையில் பிரதமர் இவ்வாறு கூறினார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *