இன்ஃப்ளூயன்ஸா நோய்க்கு சுயபரிசோதனை வேண்டாம்! - சுகாதார அமைச்சர் எச்சரிக்கை
- Shan Siva
- 01 Nov, 2025
புத்ராஜெயா, நவ 1: இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகளைக் கொண்ட நபர்கள் உடனடியாக மருத்துவமனைகளில்
மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் தற்போது நோய்க்கான சுய பரிசோதனை கருவிகளைப் பயன்படுத்த அனுமதிக்கும்
கொள்கை எதுவும் இல்லை என்று சுகாதார அமைச்சர் சூல்கிஃப்ளி அமாட் தெரிவித்தார்.
இன்ஃப்ளூயன்ஸா சோதனை கருவிகள் அங்கீகரிக்கப்படவில்லை அல்லது பொது பயன்பாட்டிற்கு விற்கப்படவில்லை என்பதால், நோயாளிகள் முறையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், தகுதிவாய்ந்த மருத்துவ நிபுணர்களிடமிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.
இந்த பிரச்சினை முக்கியமானது, ஏனெனில் எந்தவொரு தரப்பினரும் போலி அல்லது அங்கீகரிக்கப்படாத கருவிகளை விற்பனை செய்வதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படு என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



