வேப்பை தொட வேண்டாம் வேப் புகைத்து இறக்கப் போகிறவர் கொடுத்த இறுதி வாக்குமூலம்!

top-news
FREE WEBSITE AD

வேப் மற்றும் மின்னியல்-சிகரெட்டுக்கு உடனடி தடைவிதிக்க வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மீண்டும் சுகாதார அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பள்ளி மாணவர்களிடையே இந்த வேப் மற்றும் மின்னியல் சிகரெட் புகைக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆழ்ந்த கவலையை தருவதாக அச்சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என்.வி சுப்பாராவ் தெரிவித்தார்.

இதற்கு நம் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் சம்பவங்களே உதாரணம்
என்றார்.பெர்லிஸ் மாநிலத்தில் இரண்டாவது முறையாக பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் வேப் புகைத்து மயக்கம் போட்டு விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பள்ளி வகுப்பறையிலும் இன்னொரு மாணவர் கழிப்பறையிலும் வேப் புகைத்துள்ளனர்.




அதன்பின் அண்மையில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள் தொழுகை அறையில் வேப் புகைத்துள்ளனர்.இந்த காணொளி பரவலாகி வருகிறது. ஆகவே வேப் மற்றும் மின்னியல்-சிகரெட்டுகளின் பிரச்சினையிலிருந்து குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுப்பாராவ் கேட்டுக்கொண்டார்.

மேலும் இது சம்பந்தமாக, வேப் மற்றும் மின்னியல்-சிகரெட்டுகளின் விற்பனையை இன்னும் தடை செய்யாத மாநிலங்கள் உடனடியாக தடை செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.வேப் மற்றும் மின்னியல் சிகரெட்டுகள் தங்கள் வாழ்க்கையை அழிக்கும் முன், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக அதை செயல்படுத்த வேண்டும்.

உண்மையில், பள்ளி மாணவர்கள் இன்னும் இளமையாக இருக்கிறார்கள். அவர்களின் வயது 8 லிருந்து 16 வயது வரை இருக்கும்.
ஆனால் அவர்கள் வேப் மற்றும் மின்னியல்-சிகரெட்டுகள் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்கள்.இந்த நாட்டில் மாணவர்கள் மற்றும் இளங்கலை மாணவர்களிடையே இந்தப்பழக்கம் அதிகரித்து வருகிறது. ஆகவே இப்பிரச்சினையில் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மலேசிய சுகாதார அமைச்சு மற்றும் உயர்கல்வி அமைச்சை தாங்கள் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.




இந்த வேப் நுகர்வு விளைவாக ஏற்கெனவே பல சமூகப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. வகுப்பில் நுழைவதற்கு முன்பு வேப் இழுக்கும் மாணவர்கள் உள்ளனர். காலையில் வேப் எடுக்கும் மாணவர்கள் கூட காலை உணவை சாப்பிட விரும்பவில்லை.வேப் தடை குறித்து இன்னும் நடவடிக்கை எடுக்காத மாநிலங்கள், பகாங் சுல்தானின் அறிக்கையையும், காவல்துறை துணைத் த தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடினின் சுப்பாராவ் நினைவுபடுத்தினார்.

பகாங் சுல்தான் அல்சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் அல் முஸ்தபா பில்லா ஷா மின்சிகரெட்டுகள் மற்றும் வேப் பயன்பாட்டை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.பகாங்கில், குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்த தனது கவலையைத் தொடர்ந்து இந்த பரிந்துரை வழங்கப்பட்டதாக சுல்தான் கூறினார்.

எதிர்கால சந்ததியினரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக சுகாதார அமைச்சு மாட்சிமை தங்கிய சுல்தானின் ஆணையைக் கேட்டு, வேப் மற்றும் மின்னியல் சிகரெட்டுகளை உடனடியாக தடை செய்யும் என்று பி.ப.சங்கம் நம்புகிறது.காவல்துறை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின், இன்று வேப் என்பது வெறும் நீராவி அல்ல என்பதை நமக்கு நினைவூட்டி இருக்கின்றார்.

இது இப்போது ஓர் அமைதியான பொறியாக மாறிவிட்டது, மெத்தம்பேட்டமைன், எக்ஸ்டசி மற்றும் ஃபெண்டானில் போன்ற செயற்கை போதை மருந்துகளால் நிரப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.வேப் பிரச்சினை மாநில பிரச்சினை அல்ல. இது ஒரு தேசிய பிரச்சனை.

இதற்கிடையே வேப் பழக்கத்தால் இதய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி, நேற்று முன்தினம் காலை 7.15 மணிக்கு தனது இறுதி மூச்சை விடுவதற்கு முன்பு, வேப் இழுப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தியை விட்டுச் சென்றுள்ளார்.

தனது டிக் டோக்கில் வெளியிட்ட வீடியோ மூலம், 44 வயதான அவர் ஓய்வுபெற்ற நபர் என்றும், வேலை அழுத்தம் காரணமாக நான்கு ஆண்டுகளாக வேப்பிற்கு அடிமையாகி, வந்ததால் அதன் விளைவுகளுக்கு எதிர்த்துப் போராடிய தனது வேதனையான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

"என் இதயம் செயல்பட இன்னும் மூன்று சதவீதம் மீதம் இருந்தது.என்னை தூங்க வைத்து காப்பாற்ற ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டியிருந்தது.இரண்டு வாரங்களுக்கு முன்பு என் இதயம் பலவீனமாக இருந்ததால் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இப்பொழுது என் உயிர்
பிரியப்போகிறது ஆகவே வேப் புகைக்காதீர்கள் என அவர் வேப் புகைப்பவர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார். எனது ஒரு கையில் வேப்பையும், மறு கையில் மோட்டார் சைக்கிள் கைப்பிடியையும் பிடித்துக் கொள்ளும் வரை நான் வேப் புகைத்தேன்.

“நான் இரண்டு நாட்கள் வேப்பை நிறுத்தியபோது, என் இதயம் பலவீனமாக இருந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது, அதனால் நான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன், என்று அவர் கூறினார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி, அவருக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு, நுரையீரலில் துளையிடப்பட்டு, இறுதி வழிமுறைகளை வழங்கியதாக அவர் மேலும் கூறினார்."இளைஞர்களே, வேப் புகைப்பதை நிறுத்துங்கள். இன்னும் நேரமும் வாய்ப்பும் இருக்கிறது. என்று அவர் இளைஞர்களுக்கு தனது இறுதி விருப்பத்தை தெரிவித்துக்கொண்டார்.

அனைத்து தரப்பினரும் உறுதியான நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்றால், மலேசியா தீர்க்க முடியாத ஒரு பெரிய பிரச்சினையை எதிர்கொள்ளும் என்றார் சுப்பாராவ்.நாம் உயிர்களைக் காப்பாற்ற வேண்டும், இந்த நாட்டின் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும், மேலும் வேப் மற்றும் மின்னியல் சிகரெட்டுகளை உடனடியாக தடை செய்ய வேண்டும்.ஒவ்வோர் உயிரும் மிகவும் விலைமதிப்பற்றது என்றார் என்.வி சுப்பாராவ்.

Penggunaan vape dan rokok elektronik dalam kalangan pelajar semakin membimbangkan. Persatuan Pengguna Pulau Pinang menggesa Kementerian Kesihatan agar segera melarang jualan dan penggunaan produk ini demi melindungi nyawa generasi muda daripada bahaya ketagihan dan penyakit serius.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *