தேவையில்லாமல் பழைய பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம்! - ஒற்றுமை அரசு கூட்டாளிகளுக்கு ஜாஹிட் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, ஜூலை 3: ஜொகூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது அம்னோ மற்றும் பாரிசான் கூட்டணியை குறிவைத்து பழைய பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம் என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தனது ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டாளிகளை வலியுறுத்தியுள்ளார்.

சிலர் பழைய பிரச்சினைகளைப் பயன்படுத்தி அம்னோ மற்றும் பாரிசான் மீது தாக்குதல் நடத்துகின்றனர், ஆனால் நாங்கள் ஒற்றுமை அரசாங்கத்தில் பங்காளிகளாக இருப்பதால், இவை பெரிதுபடுத்தப்படாது என நம்புகிறேன் என்று கெம்பாஸில் குடியிருப்பாளர்களைச் சந்தித்த பிறகு அவர் கூறினார்.

தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவைக்குத் திரும்பும்போது எந்தக் கட்சியும் சங்கடத்தை எதிர்கொள்ளக்கூடாது என்று ஜாஹிட் கூறினார்.

அமைச்சரவை அமைச்சர்கள் ஒவ்வொரு வாரமும் சந்திப்பதால், பழைய பிரச்சினைகளை மீண்டும் கிளப்புவதற்குப் பதிலாக, ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர்களின் பலங்களை முன்னிலைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *