பகடிவதை சம்பந்தப்பட்ட மரண வழக்குகளை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தாதீர்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆக.19

பகடிவதைக்கு ஆளாகி மரணமடைந்தவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை, மற்ற தரப்பைத் தாக்குவதற்கான அரசியல் ஆயுதமாக பயன்படுத்த வேண்டாம் என்று அனைத்து தரப்பினருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவூட்டினார்.

சமூக ஊடகங்களில் மரண வழக்குகளை பயன்படுத்தும் நடவடிக்கை, மக்களின்
சிந்தனையை திசை திருப்பும் என்பதால், அவ்விவகாரம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நம் நண்பர்கள், அவர்களின் துணைவியர், இவர் எம்மாதிரியான பிரதமர்? என்று கூட கேட்பார்கள். ஒரு நபர் பலியாகியிருப்பார். பின்னர், அதனை ஓர் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி மற்றவர்களைத் தாக்குகிறோம். அது உண்மையாக இருந்தால் பரவாயில்லை. அந்த நபரின் மரணத்தை நாம் எப்படி பயன்படுத்த முடியும். ஏமாற்றி, தூண்டிவிடுவது என்று அர்த்தமாகும். ஆனால், அதுதான் நிலைமை. அதனால்தான் நாம் பகுத்தறிவைக் கொண்டிருக்க வேண்டும்," என்றார் அவர்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற பிரதமர் துறையின் ஊழியர்களுடனான மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய அன்வார் இப்ராஹிம் அதனைத் தெரிவித்தார்.சமூக ஊடகங்களில் நம்பகத்தன்மையற்ற தகவல்கள் பரவுவதால், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

உண்மையான தீர்வுகளைக் கண்டறியும் முயற்சிகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அரசியலை மூலதனமாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *