சட்டவிரோத செயல்களில் பதவிகளை பயன்படுத்தாதீர்- ஸாஹிட்!
- Muthu Kumar
- 18 Aug, 2025
பாசிர் சாலாக், ஆக. 18-
சட்டத்திற்குப் புறம்பான எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவதற்காக, பாதுகாப்பு மற்றும் தற்காப்புப் படைகளின் அதிகாரிகளும் உறுப்பினர்களும் தங்களின் பதவிகளை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று. துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மட் ஸாஹிட் ஹமிடி நினைவுறுத்தியுள்ளார்.
பதவி அல்லது அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படும் விவகாரத்தில் தாம் சமரசம் காணப்போவதில்லை என்ற மலேசிய ராணுவப் படைத் தளபதி ஜெனரல் டான் ஸ்ரீ முஹமட் நிஸாம் ஜஃபாரின் அறிக்கையில் கூறியுள்ளார்.
தாம் உடன்படுவதாக, பாஹிட் "தகவல் அளிப்பவர்களாக இருப்பதோடு மட்டுமின்றி, சட்டவிரோத நடவடிக்கைகளில் நேரடியாக சம்பந்தப்படும் ஆயுதப் படையின் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதில் தாம் சமரசம் காணப் போவதில்லை என்ற அவரின் (முஹமட் நிஸாம்) அறிக்கையில் நான் உடன்படுகிறேன்" என்று ஸாஹிட்
தெரிவித்துள்ளார்.
பேராக்கின் பாசிர் சாலாக்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பேராக் மாநில கெமாஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஸாஹிட் இதனைத் தெரிவித்தார்.நாட்டின் பாதுகாப்பு அவசியம் தற்காக்கப்பட வேண்டும் என்பதோடு, பாதுகாப்புப் படையின் தோற்றமும் சம்பந்தப்பட்டிருப்பதால், அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது அவசியம் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று நான் நம்புவதால், இதே நோக்கத்துடனான இதர சட்டவிரோத நடவடிக்கைகள் அல்லது அதுபோன்ற நடவடிக்கைகளில் அமலாக்கப் படையினரும் ஈடுபடக் கூடாது' என்று ஸாஹிட் தெரிவித்தார்.
ஒப்ஸ் சோஹோரின் கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கில் மூத்த ராணுவ அதிகாரிகள் ஐவர் உட்பட மொத்தம் 10 பேர், மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தினால் (எம்ஏசிசி) கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



