பெற்றோரை சாமுராய் வாளால் தாக்கிய மகன்! மனநல பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 2: பெற்றோரை சமுராய் வாள் கொண்டு கடுமையாகக் காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 30 வயது ஆடவரை,  ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம் இன்று மனநல பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டது.

நீதிபதி அய்னுல் ஷஹ்ரின், குற்றவாளியான ஐமான் சுஹைமியை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 342ன் கீழ், தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள ஹாஸ்பிட்டல் பாகியா உலு கிந்தா மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை உடை அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரான ஐமான், தனது தந்தை சுஹைமி டாவி மற்றும் தாய் ஷஹலிசா அக்மத் ஹாஷிம்  ஆகியோரைக் சமுராய் வாளால் கடுமையாக காயப்படுத்தியதாக சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

இந்த சம்பவம் 2025 டிசம்பர் 26 அன்று காலை 6.30 மணியளவில், பேராக் மாநிலம் பெர்ச்சாம் பகுதியில் உள்ள பண்டார் பாரு புத்ரா, பெர்சியாரன் புத்ரா வீடொன்றில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 326ன் கீழ், மேலும் பிரிவு 326A உடன் இணைத்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது கசையடி  தண்டனை விதிக்கப்படும்.

துணை அரசுத் தரப்பு வழக்கறிஞர் எம். ரவீனா, இரு பாதிக்கப்பட்டவர்களும் தற்போது இப்போஹ் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *