தாய் தந்தையைக் கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை; 24 பிரம்படிகள்!
- Shan Siva
- 18 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 18: 2023 ஆம் ஆண்டில் தனது பெற்றோரைக் கொன்றதற்காக வேலையில்லாத ஆடவர் ஒருவருக்கு இன்று அதிகபட்ச தண்டனையாக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில்
நீதிபதி கே முனியாண்டி முன் நடந்த விசாரணையின் போது இரண்டு கொலைக்
குற்றச்சாட்டுகளையும் , தண்டனைகளையும் தாம் புரிந்துகொண்டதாக 44 வயதான அஃபெண்டி அகஸ் அலி உறுதிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை வழங்குவதற்கு முன்பு
அவரிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டபோது, அவர் வெறுமனே ஒன்றுமில்லை என்று பதிலளித்தார்.
பேராக், ஈப்போவில் உள்ள மருத்துவமனையின் மனநல மருத்துவ அறிக்கை, குற்றங்கள் நடந்த நேரத்தில் நல்ல மனநிலையில் அவ்வாடவர் இருந்ததை
உறுதிப்படுத்தியது.
கடந்த 2023 ஆம் ஆண்டு, டிசம்பர் 9 ஆம் தேதி இரவு 7.10 மணி முதல் 7.20 மணி வரை, பிரிக்ஃபீல்ட்ஸ், ஜாலான் பெஞ்சலா ஹிலிர் 6, கம்போங் சுங்கை பெஞ்சலாவில் உள்ள அவர்களது வீட்டில், அவரது 82 வயது தந்தை அகஸ் அலி உமர் மற்றும் 72 வயது தாயார் டார்லிஸ்மா ஞ்சாது சலே ஆகியோரைக் கொலை செய்ததாக அஃபெண்டி மீது குற்றம் சாட்டப்பட்டது!
Lelaki penganggur dijatuhi hukuman 40 tahun penjara dan 24 sebatan kerana membunuh ibu bapanya pada Disember 2023. Mahkamah Tinggi KL mengesahkan dia waras semasa kejadian. Tertuduh tidak memberi sebarang kenyataan sebelum hukuman dijatuhkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



