உணவுக்கு அடிமையானால் ஆரோக்கியக் குறைபாடுகள் வரும்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

பந்திங், அக்.15-

விதவிதமான உணவுகளுக்கு மனிதர்கள் அடிமையானால் தொடரும் ஆரோக்கியக் குறைபாடுகளுக்கு அளவே இல்லை என்று கோலலங்காட் நகராண்மைக்கழகத்தின் தலைவர் துவான் முகமட் ஹஸ்ரி நோர் முகமட் தெரிவித்தார்.

அடிக்கடி ஆர்டர் செய்து விருப்பம் போல் உண்ணும் அவசர உணவுகளும் அதனால் விளையும் மோசமான பாதிப்புகளும் தொடர உடல் அளவுக்கு மீறிய பருமனால் வந்திடும் நீரிழிவு, ரத்த அழுத்தம் இறுதியில் உயிருக்கே உலை வைத்து விடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். நேற்று முன்தினம், இங்கு மெட்ரிகுலாசி கல்லூரியில் ஹரி சுக்கான் நெகாரா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நடைப்பயிற்சியை தேசியக் கொடியை அசைத்து தொடக்கி வைத்து உரையாற்றிய முகமட் ஹஸ்ரி மேற்கண்ட கருத்தை வலியுறுத்திப் பேசினார்.

நாட்டில் பேசப்பட்டு வரும் பெரும்பாலான மக்கள் மத்தியில் நிலவி வரும் உடல் பருமன் தொல்லையால் தங்களது அன்றாடப் பணிகளைக் கூட சரிவர செய்ய முடியாமல் அவர்கள் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.

இதன் காரணமாக, முறையான பயிற்சிகள் ஏதும் மேற்கொள்ளாத சூழ்நிலையில் வந்திடும் நீரிழிவு காரணமாக அடிக்கடி மருந்து மாத்திரைகள், இன்சுலின் ஊசிகள் போடுதல் பலருக்கு தொடரும் கொடுமையான அனுபவங்கள் என்று அவர் கூறினார்.

அரசுப் பணியாளர்கள் மட்டும் இன்றி மாணவர் சமுதாயமும் நாளை அரசுத் துறைகளில் வேலை தேடிச் செல்லும் போது
உடல் பருமனை ஒரு குறையாக எடுத்துக் கொண்டு வேலை கிடைப்பதிலும் தாமதம் ஏற்படும் நிலை வரக்கூடும் என்பதால் அனைவரும் ஆரோக்கியத்தைப் பேணும் பொருட்டு உணவை அளவாக எடுப்பது
சிறப்பு என்று முகமட் ஹஸ்ரி ஆலோசனை கூறினார். தொடர்ந்து, நடைப் பயிற்சியை வழி நடத்திய பயிற்றுநர்களுக்கு நற்சான்றிதழ்கள் எடுத்து வழங்கி அவர்களைப் பாராட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *