உணவிற்கு ஆயிரம் வெள்ளி செலவு,ஆனால் பட்டாசுக்கு 2 ஆயிரம் - பினாங்கு பயனீட்டாளர் சங்கம்!

top-news
FREE WEBSITE AD

(கே. ஆர். மூர்த்தி)

பினாங்கு, அக்.22-

உணவிற்கு ஆயிரம் வெள்ளி செலவு செய்தவர்கள் பட்டாசு வாங்க இரண்டாயிரம் வெள்ளி வரை செலவு செய்துள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்ததாக அச்சங்கத்தின் கல்வி மற்றும் ஆய்வுப் பிரிவு அதிகாரி என். வி. சுப்பாராவ் தெரிவித்தார்.

இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு நாடு தழுவிய நிலையில் பட்டாசுகள் கடல் போன்ற விற்பனையால் மலைகள் போன்ற புகைகள் உருவாகின.அதனால், பட்டாசு விற்பனைக்கு முழு தடை வேண்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்துகிறது. தீபாவளிக்கு முன்னதாக, லுனாஸ் பாயா பெசாரில் நிகழ்ந்த பட்டாசு வெடிப்பு சம்பவம் பலரின் கவனத்திற்கு மீண்டும் கொண்டுவந்துள்ளது. தலையில் பலத்த காயம் அடைந்த ஒருவர் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜாலான் பாயா பெசாரில் ஒரு வாணவேடிக்கை நிகழ்ச்சியைக் காண அதிகாலை 12.45 மணிக்கு மாபெரும் கூட்டம் கூடியிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூலிம் மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரி சூப்ரிண்டென்டன் ஹாஜி சுல்கிப்ளி பின் ஹாஜி அஜிசான் தெரிவித்தார்."பட்டாசுகளை அதிகபட்சமாக தடை செய்யப்பட வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் 20 ஆண்டுகளுக்கு மேலாகவே அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்து வந்துள்ளது.

பொது பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக பட்டாசுகள் மற்றும் பட்டாசுகள் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
செல்லப்பிராணிகள் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படும் விபத்துகள், காயங்கள் மற்றும் துன்பங்களைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி நாடு தழுவிய
நிலையில் பட்டாசுகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

தடைக்கான காரணம், பொது பாதுகாப்பு (தீக்காயங்கள், காயங்கள் மற்றும் இறப்புகளைத் தடுப்பது), சுற்றுச்சூழல் பாதுகாப்பு (மாசு பாட்டைக் குறைத்தல்) மற்றும் விலங்கு நலன் (செல்லப்பிராணிகள் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படும் துன்பத்தைத் தடுப்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.

தற்போதுள்ள சட்டங்கள் போதுமான அளவு அமல்படுத்தப்படவில்லை. பட்டாசுகளுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரே வழி
முழுமையான தடை மட்டுமே. கடத்தலை எதிர்த்துப் போராடவும், ஒழுங்குமுறை மற்றும் வரிவிதிப்புக்கு அனுமதி அளிக்கவும். பிப்ரவரி 2023 ல் மலேசிய அரசாங்கம் பட்டாசுகளுக்கு சட்டப்பூர்வமாக்க ஒப்புக்கொண்டது.

இந்த முடிவு நீண்டகால தடையை மாற்றியது. இதன் பொருள் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இருவருக்கும் இப்போது உரிமங்கள் தேவைப்படும்.முந்தைய தடை மலேசியாவில் பட்டாசுகள் மீதான தடை 1955 ஆம் ஆண்டுக்கு முந்தையது.பட்டாசுகள் பல காரணங்களால் ஆபத்தானவை. வெடிமருந்துகள் வெடிக்கும்போது தீப்பிடிக்கும் அபாயம், காற்று மற்றும் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துதல், தீக்காயங்கள் மற்றும் பிற விபத்துகளுக்கான சாத்தியக்கூறு அடங்கும்.

பட்டாசுகளின் ஆபத்தான தன்மையால், அவற்றின் பயன்பாட்டைக் குறைப்பது மிகவும் முக்கியம். அதே நேரத்தில் வெடிக்கப்படும் பட்டாசுப் புகையும் சேர்ந்து காற்றை மேலும் அடர்த்தியாக்கி சுவாசிக்க திணறும் சூழலை ஏற்படுத்தி விடும்.காற்றின் தரம் (50 AQI-) யாக இருந்தால் எல்லா உயிர்களும் சுவாசிக்க எளிதாக, ஏற்றதாகயிருக்கும். ஒருநாள் வெடித்த பட்டாகப் புகையால் (400-500 AQI) அளவிற்கு உயர்ந்திருந்தால் அது ஆபத்து.

வருடம் முழுதும் வெளியேறும் தொழிற்சாலையின் புகை மற்றும் வாகனப்புகையை விட ஒருநாள் பட்டாசுப்புகையின் ஆபத்து அதிகம்.ஒரு மணிநேரம் வெடிக்கும் பட்டாசுப்புகையால் உள்ளுறுப்புகளில் படியும் பொட்டாசியம், நைட்ரேட், பேரியம், சல்பர்டையாக்ஸைடு போன்ற வேதி எரிகழிவை சுவாசித்து வாழும் எல்லா உயிர்களின் நுரையீரல் மற்றும் குருதியில் ஆழமாக ஊடுருவி கடுமையான உடல் நலக்கேட்டை ஏற்படுத்தும் என்பதை கொண்டாட்ட மனநிலையில் இருப்பவர்கள் உணர வேண்டும்.

அதிக புகை கக்கும் புஸ்வானம், மத்தாப்பு, சங்குச்சக்கரம், பாம்பு வில்லை, சாட்டை போன்ற பட்டாசுகளின் எச்சம் நீரில், நிலத்தில், காற்றில் கலந்து நிரந்தரமாக தீங்கை விளைவித்துக் கொண்டேயிருக்கும்.இந்த நெருப்பு வேதியல் வன்மத்திற்கு பொறுப்புள்ள சமூகம் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டும். இப்பொழுது உங்கள் வீடுகளில் மீதமிருக்கும் பட்டாசுகளை வெடிக்காமல் தூக்கி எறிந்துவிடுங்கள் என்று என். வி. சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *