மரக் குச்சி காணொளி விவகாரம்! - KLCC விளக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப்.  8 - பேரங்காடியின் நுழைவாயில் ஒன்றில் அதன் பாதுகாப்புப் பணியாளர்களுக்கும் மரக் குச்சி வைத்திருந்த வருகையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாகுவாதம் தொடர்புடைய காணொளி சமூக ஊடகங்களில் நேற்று முதல் பரவி வருவதை அடுத்து, சூரியா கே.எல்.சி.சி. நிர்வாகம் அதற்கான விளக்கத்தை வழங்கியுள்ளது.

பேரங்காடிக்குள்  நீண்ட மரக் குச்சியைக் கொண்டு வரக் கூடாது என அந்த வருகையாளரிடம் கூறும் காட்சிதான் அந்தக் காணொளியில் உள்ளதாகவும்,  இது அனைத்து வருகையாளர்களுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு நிலையான பாதுகாப்பு நடவடிக்கை என்பதை வலியுறுத்த விரும்புவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலுன்ம் எந்த அரசியல் நிலைப்பாட்டையும்  தங்களது நிர்வாகம் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்றும் நிர்வாகத் தரப்பு தெரிவித்துள்ளது.

சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுதான் பேரங்காடியின் முதன்மையான முன்னுரிமையாக என்று சம்பந்தப்பட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *