28.9 விழுக்காடு குறைந்திருக்கும் நச்சுணவுச் சம்பவங்கள்!

top-news
FREE WEBSITE AD

பத்து கவான். செப். 14-

நாடு முழுவதும் பதிவான நச்சுணவு சம்பவங்கள் 28.9 விழுக்காடு குறைந்திருப்பது. நாட்டில் உணவுப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்துவதற்கான சுகாதார அமைச்சின் உறுதிப்பாடு பயனளித்துள்ளதைக் காட்டுகிறது.

கடந்தாண்டு ஆகஸ்ட் 31 தொடங்கி செப்டம்பர் ஆறாம் தேதி வரையிலான காலகட்டத்தில் 18 ஆயிரத்து 34 சம்பவங்கள் பதிவான வேளையில், இவ்வாண்டு அதே காலகட்டத்தில், அந்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 821 சம்பவங்களாக குறைந்துள்ளதை, சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் சுட்டிக்காட்டினார்.

முந்தைய வாரத்தில் பதிவான 15 நச்சுணவுச் சம்பவங்களுடன் ஒப்பிடும்போது கடந்த வாரத்தில் 12 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாக டாக்டர் சுல்கிஃப்லி கூறினார்.

"எனவே, நச்சுணவு அதிகமாக உள்ளது. நம் நாட்டில் மக்கள் மற்றும் ஒட்டுமொத்த சம்பவங்களின் அடிப்படையில், நாம் இன்னும் அதை எதிர்கொள்கிறோம். என்னால் இயல்பாக இருக்க முடியாது. ஒருபோதும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. நாம் அலட்சியத்துடனும் கவனக்குறைவாகவும் இருக்கக்கூடாது. குறிப்பாக உணவு விநியோகிப்பாளர்கள் மேலும் மோசடி செய்யவிடக் கூடாது." என்றார் அவர்.

பினாங்கு, பத்து கவானில் நடந்த ஏப்ரோன் வோக் 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
உலகளவில் 200க்கும் மேற்பட்ட நோய்கள் மாசு அடைந்த உணவு வகைகளால் ஏற்படுகின்றன. இந்நிலையில், ஒவ்வோர் ஆண்டும் 10 பேரில் ஒருவர் உணவு மூலம் பரவும் நோயால் பாதிக்கப்படுவதாக, உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *